அபிராமம்:

அபிராமம்-இது இராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டத்தில் அமைந்துள்ள, வளர்ச்சி பாதையில் சென்று கொன்டிருக்கும் எங்கள் ஊர் ஆகும். இது பார்திபனூர் மற்றும் கமுதி ஆகிய ஊர்களுக்கு இடையே அமைந்துள்ளது. இவ்வூரின் அஞ்சல் குறியிட்டு எண்-623601. இதற்கு அருகில் உள்ள கிராமங்களின் பெயர்களாவன நத்தம், வடக்கூர், அகத்தாரிருப்பு, அண்ணா நகர், நரியன், நெடுங்குளம் மற்றும் கிழக்கு அபிராமம் ஆகும்.

நத்தம் வாழ் மக்களிடம் இருந்து

நத்தம் - இது சீர்பொங்கும் சின்ன ரங்கூனும் அல்ல; பெரிய ரங்கூனும் அல்ல; இது இராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் அபிராமம் அருகில் உள்ள ஒரு சிறிய கிராமம் ஆகும். இக்கிராமம் முற்காலத்தில் சின்ன ரங்கூன் என்று அழைக்கப்பட்டிருக்கலாம் ஆனால் அதற்கான சிறப்பு ஏதும் இங்கு இல்லை.